16 February 2013

Mr.Perfect – Perfect Life Partnerக்காக......!!!!


                             தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோர் மனதிலும் ஓர் எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். எப்படிப்பட்டவர் கிடைத்தால் நம் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும், எப்படியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.

                            என்னைப் போலவே சிந்திக்கும் ஒரு துணை கிடைக்குமா? அப்படி கிடைத்தால் சந்தோசமாக வாழமுடியுமா என்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் திரைப்படமே Mr. Perfect. பிரபாஷ், காஜல் அகர்வால் மற்றும் தப்ஷி நடித்து தெலுங்கில் வெளிவந்த ஒரு அருமையான கருத்தை சொல்லும் திரைப்படமே இது. தமிழிலும் டப் செய்யப்பட்டது.



                யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்காமல் No adjustments என்ற கொள்கையுடன் அவுஸ்ரேலியாவில் வாழும் இந்திய இளைஞன் விக்கி. தன் தங்கையின் திருமணத்துக்காக இந்தியா வரும் விக்கியை அவனது சிறு வயது நட்பான பிரியாவை மணமுடிக்க சொல்லி பெற்றோர்கள் கேட்க அவளுடன் பழகி பார்த்து முடிவு சொல்வதாக சொல்கிறான் விக்கி. 

            தங்கையின் திருமணத்துக்காக ஒரே வீட்டில் தங்கும் இருவரும் ஆரம்பத்தில் முட்டிக் கொண்டாலும் போக போக நெருங்கிவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் விக்கியை மணமுடிப்பதற்காக பிரியா தன் அத்தனை விருப்புக்களையும் விட்டுக் கொடுக்க, யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்காமல் வாழும் விக்கிக்கு அது பிடிக்காமல் போய்விடுகிறது. பிரியாவை மணமுடிக்க மறுத்துவிட்டு தன்னைப் போல் ஒரு பெண்ணை தேடி அவுஸ்ரேலியா திரும்புகிறான்.

                   இதற்கிடையில்  Cadbury  சொக்லேட் நிறுவனத்தால் 'Made for Each Other' என்ற சொக்லேட் அறிமுகப்படுத்துவதற்காக ஒரு Survey நடத்தபடுகிறது. அதில் தன் விருப்பு வெறுப்புக்களை நிரப்பி கொடுக்கிறான் விக்கி. அவர்கள் நடத்திய Surveyயில் விக்கியின் விருப்பு வெறுப்புக்களுடன் ஒரு பெண்ணின் விருப்பு வெறுப்புக்கள் ஒத்துப்போகிறது. அவள் தான் மாஜி. இருவரும் 'Made for Each Other' ஆக தெரிவுசெய்யபடுகிறார்கள். இருவரும் சந்தித்து பழகி காலிக்கிறார்கள். ஏற்கனவே விக்கியை வெறுக்கும் மாஜியின் தந்தை பிரகாஷ்ராஜ் திருமணத்துக்கு சம்மதிக்காமல் ஒரு சவால் விடுகிறார். அவரது மூத்த பெண்ணின் திருமணத்திற்கு விக்கியை வரச்செய்து அங்கே அவர்களின் சொந்தக்காரர்கள் நால்வரில் யாராவது இருவர் மாஜிக்கு விக்கி பொருத்தமானவன் என்று சொல்லிவிட்டால் திருமணம் செய்து கொடுப்பதாக கூறுகிறார்.

                     சவாலுக்கு சம்மதித்து திருமணத்துக்கு போக அங்கே மணமகனின் உறவாக பிரியாவும் வருகிறாள். மனதில் காயங்களை வைத்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற விக்கிக்கு உதவுகிறாள் பிரியா. ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவனுக்கு தெரியாமலே சிறிது சிறிதாக விக்கி மாறிவிடுகிறான். மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கவும், பொறுத்துப் போகவும் ஆரம்பிக்கிறான். இது மாஜிக்கு பிடிக்காமல் போய்விடுகிறது.


                போட்டியில் ஜெயிக்கிறானா? யாருடன் இணைகிறான் என்பது கிளைமாக்ஸ். ஒரே மாதிரி கொள்கையுடையவர்கள் ஒன்றாக வாழ முடியாதென்று புரிந்து கொண்டு இறுதியில் பிரியாவுக்காக இந்தியா திரும்புகிறான். 

                   எதற்கும் விட்டுக்கொடுக்காமல் திமிருடன் திரியும் விக்கியாக பிரபாஷ் பிரமாதம். ஆரம்பத்தில் கண்ணில் காதலுடன் பிரபாஷை சுற்றும் காஜலின் அழகும், மனதில் காயத்தை வைத்துக் கொண்டு சிரித்துப் பேசும் அந்த நடிப்பும் அபாரம். சிறந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். 'உன்ன மாதிரி யோசிக்கிற பெண்ணை விட உனக்காக யோசிக்கிற பெண் கூடதான் சந்தோசமாக இருக்க முடியும்' என்று பிரபாஸின் அப்பாவாக வரும் நாசர் கூற 'நான் என் கூட சந்தோசமாக இருக்கும் போது என்ன மாதிரி யோசிக்கிற பெண்ணு கூட ஏன் சந்தோசமாக இருக்க முடியாது' என்று பிரபாஸ் சிந்திக்கும் போது நம்மையும் சிந்திக்க வைக்கிறார். அதற்கான விளக்கத்தையும் படத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

                    என்னையே மாதிரி அவளும் யோசிக்கிறாள் அதற்காக தான் அவளை Love பண்ணினன் என்ற காதல்கள் நிலைப்பதில்லை. உதாரணமாக இருவரும் Social Networksஇல் ஆர்வம் அதிகமாக இருந்தால் ஒருவரை மற்றவர் கட்டுப்படுத்த மாட்டார். அப்புறம் online இல் Chat செய்து தான் குடும்பம் நடத்த வேண்டி வரும். என்னை போலவே அவளும் வித்தியாசமானவள், யார் கூடயும் பெரிதாக கதைக்க மாட்டாள் என்று சொல்லும் ஜோடிகள் சமூகத்திலிருந்து விலகி தனியே குடும்பம் நடத்த வேண்டியது தான். ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கள் மற்றவருடையதிலிருந்து ஓரளவாவது வேறுபடும் போது தான் வாழ்க்கையை சமாளிக்க முடியும். 

                  விருப்பங்கள் சேர்திருப்பது தான் காதல் இல்லை. மனசுகள் சேர்ந்திருப்பது தான் காதல்!!!

             Perfect ஆன இரண்டு பேருக்கு நடக்கிறதுக்கு பெயர் கல்யாணம் இல்லை. ஒருத்தொருக்கொருத்தர் Perfect பண்ணிக்கிறது தான் கல்யாணம்!!!

என்ன நட்புக்களே, உங்கள் Partner Perfectஆ??? இல்லை Perfect பண்ணிக்கிட்டிங்களா????





-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-