20 October 2012

நித்தியின் டயரியிலிருந்து......!!


                         கடந்த ஏப்ரல் மாதம் மதுரை இளைய ஆதினமாய் நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, நேற்றைய தினம் ஆதீன முதல்வர் அருணகிரிநாதர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந் நிலையில் நித்தியானந்தா டயரி எழுதினால் இப்படித்தான் இருக்குமோ???




சிவனே என்றிருந்தேன்
சீண்டிப் பார்த்துவிட்டார்கள்!
கேட்காமல் கொடுத்துவிட்டு
சொல்லாமல் பறித்து விட்டார்கள்!

அவசியமெனில் விலகுகிறேன் என
அடிக்கடி அறிக்கை விட்டபடி
இப்படியே இப் பதவியில்
நிலைத்துவிடலாம் என்றல்லவா
நினைத்திருந்தேன்!!

இளைய ஆதீனமாய் இருந்து
இன்னும் எத்தனை பிகரை
கவுத்துவிடலாம் என்று
கணக்கு போட முன்பே - பதவியை
கவுத்து விட்டார்களே....!

ஆதினமே உந்தன்
அவசரமான முடிவுக்கு
கற்பிக்க போகும்
காரணம் யாதோ??

அருணகிரியே....- உனக்கு
அனுப்ப வேண்டிய பணத்தில்
அறியஸ் வைத்ததால் தான்
அதிரடியாய் தூக்கி விட்டாயோ?

தமிழ் நாட்டு அரசியல்
தலையிட்டதால் - கொஞ்சம்
தவித்துப் போய்விட்டாயோ?

பிரபல சீடர்கள் பெருகும் - இந்த
பிஸியான நேரத்தில்
பதவியை பறித்து விட்டால்
பக்தைகளுக்கு என்ன
பதில் சொல்வேன்?

ரஞ்சிதாவுக்கு மேலாக – நடிகை
கௌசல்யாவுக்கும் பதவி
கொடுத்து தொலைத்துவிட்டேன்.
எப்படித் தான் இவர்களை
எதிர்கொள்ளப் போகிறேனோ?

அவமானங்னள் கண்டு
அஞ்சிப் போய்விடவில்லை
ஏனென்றால் - இவையொன்றும்
எனக்குப் புதிதில்லையே!

அன்பு பக்தர்களே,
அருள் வாக்கு கூறுகிறேன்
அவதானமாய் கேளுங்கள்

'அழகாய் இருப்பவர்கள்
ஆன்மீகத்தை தேர்ந்தெடுத்தால்
அன்பர்களுக்கும் கஷ்டம்,
அவனுக்கும் கஷ்டம்'

எந்தன் நிலை கண்டு
எவருமே வருந்த வேண்டாம்
எந்தன் புகழ்
என்றுமே அழியாது.

புகழ் மங்கிப் போய்விட்டால்
புதிதாய் ஒரு CD வெளியிட
இன்னோர் ரஞ்சிதாவோ...
இல்லை ஆர்த்தி ராவோ...
இல்லாமலா போய்விடுவார்கள்???




-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-




5 comments:

  1. /புகழ் மங்கிப் போய்விட்டால்
    புதிதாய் ஒரு CD வெளியிட
    இன்னோர் ரஞ்சிதாவோ...
    இல்லை ஆர்த்தி ராவோ...
    இல்லாமலா போய்விடுவார்கள்?//
    இதே விடயத்தை பற்றி நானும் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருந்தேன் இன்று மாலை...

    புகழ் என்னவெல்லாம் செய்கிறது பார்த்தாயா பையா :)

    ReplyDelete
    Replies
    1. இந்த புகழ் தான் மனிதரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது

      Delete
  2. ஹ..ஹ.. சிரிப்பதா அழுவதா என தெரியலியே..

    அருமைங்க

    ReplyDelete

என் கிறுக்கல்ளுக்கான உங்கள் கருத்துக்களை பகிருங்கள்